education

img

கல்வி தொலைக்காட்சிக்கு முதலமைச்சர் வாழ்த்து

சென்னை:
கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஓராண்டை நிறைவு செய்து உள்ளதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,” ஓராண்டை நிறைவு செய்துள்ள கல்வி தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டு. கல்வி தொலைக்காட்சி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது என்ற செய்தியால் இரட்டிப்பு மகிழ்ச்சி.கல்வி தொலைக்காட்சியை முதல்நாள் பார்க்க தவறியோர், மறுநாள் யூடியூப் வழியாக பார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால் பலர் பயனடைவர். கல்வி தொலைக்காட்சியை சிறப்பாக செயல்படுத்தும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோருக்கு பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.

;